வடகொரிய ஹேக்கர்கள் திருடிய 1பில்லியன் டாலர் மூலம் அணுஆயுதம் தயாரிக்கும் கிம் ஜாங்...
வடகொரிய ஹேக்கர்கள் திருடிய 1பில்லியன் டாலர் மூலம் அணுஆயுதம் தயாரிக்கும் கிம் ஜாங்...
வட கொரியாவின் ஏபிடி 38 (மேம்பட்ட தொடர்ச்சியான அச்சுறுத்தல் - Advanced Persistent Threat) என்ற பெயரில் இயங்கிவரும் ஹேக்கர்கள் குழு திருட்டு முதல் மால்வேர் வரை அனைத்தையும் செய்கிறது என்பது உலகம் முழுவதும் உள்ள சைபர் ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் தெரியும். அவர்கள் இதுவரை செய்த அனைத்து திருட்டுகளுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது.
சமீபத்திய அறிக்கையின்படி,கடந்த ஆண்டு ஏபிடி38 பல்வேறு வங்கிகள் மற்றும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேன்ஜ்களிடம் இருந்து 1 பில்லியன் டாலர் வரை திருடியுள்ளது. அவர்கள் பண பரிமாற்ற மையங்களை குறிவைத்து மோசடியான கிரிப்டோ ஆப்பரிங்களை உருவாக்கியுள்ளனர். அவர்கள் திருடும் ஒவ்வொரு டாலரையும் நேரடியாக நாட்டின் இராணுவத்திற்கு வழங்கியுள்ளனர்.
வடகொரியா
இவை அனைத்தையும் விட மோசமாக, இந்த அனைத்து பணமும் நீண்ட காலத்திற்கு பிறகு வடகொரியா உருவாக்கி வரும் அணு ஆயுதங்களுக்கான நிதியாக செல்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகியுள்ளது.
இப்போது வரை
உலகெங்கிலும் உள்ள நாடுகள் அனைத்தும், போருக்காக ஏங்கும் இந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன் இறக்குமதிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்து, அதன் அணு ஆயுத ஆய்விற்கான நிதியுதவி அளிக்கும் திறனை தடுக்கின்றன. அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக, தங்களது ஹேக்கர்கள் மூலம் பலவீனமான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட வங்கிகளை இலக்காக வைத்து, மோசடி செய்து நிதி திரட்டுகின்றது.
உண்மையிலேயே சரியா?
"வட கொரியா தனது அடுத்த ஏவுகணையை பரிசோதிக்கும்போது, அதற்கான பணத்தை பிட்காயினில் செலுத்தவது உண்மையிலேயே சரியா? என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்"என்கிறார் மற்றொரு பாதுகாப்பு நிபுணர்.
Comments
Post a Comment