தமிழகத்தில் வெயில் இன்னும் அதிகமாகுமாம்!
12 நகரங்களில் 100 டிகிரி வெயில் பதிவு: வழக்கத்தைவிட 7 டிகிரி வரை உயர வாய்ப்பு
தமிழகத்தில் 12 நகரங்களில் 100 டிகிரி அளவை விட அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது. அடுத்த சில தினங்களுக்கு வழக்கத்தை விட 7 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. அதிக வெப்பநிலை பதிவாகும் நகரங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நேற்று மாலை 5.30 மணி வரைபதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக கரூர் பரமத்தி, மதுரை தெற்கு, மதுரை விமான நிலையம், திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 105 டிகிரி பதிவானது.
மேலும், சேலம், வேலூர் ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, நாமக்கல்,தருமபுரி ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, கோவை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, தொண்டியில் 100 டிகிரி வெப்பநிலை பதிவாகி யுள்ளது.
அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வழக்கத்தை விட சுமார் 7 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.
இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோடு பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. அதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Comments
Post a Comment