இந்தியாவுக்கு வரும் முதல் 30 லட்ச ரூபாய் கார்!
இந்தியாவுக்கு வரும் முதல் சிட்ரோன் எஸ்யுவி
பிரெஞ்ச் கார் நிறுவனமான சிட்ரோன் இந்தியச் சந்தைக்குள் விரைவில் நுழைய இருக்கிறது. இந்த பிராண்டிலிருந்து இந்தியச் சந்தைக்குள் வரப்போகும் முதல் கார் அதன் பிரபல எஸ்யுவி மாடலான சி5 ஏர்கிராஸ்.
சர்வதேச அளவில் இந்த மாடலில் பெட்ரோல், டீசல் இரண்டு ஆப்ஷன்களுமே சந்தையில் விற்பனையிலும் பயன்பாட்டிலும் உள்ளன. ஆனால், இந்தியச் சந்தையில் டீசல் வெர்ஷன் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் சர்வதேச சந்தைகளில் டீசல் வெர்ஷனில் அதிகபட்சமாக 2 லிட்டர் 180 ஹெச்பி திறனை வெளிப்படுத்தக்கூடிய இன்ஜின் உள்ளது.
ஆனால், இந்தியாவில் அறிமுகமாகும் கார்களில் 1.5 லிட்டர் 130 ஹெச்பி திறன் கொண்ட இன்ஜின் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிகிறது.
மேலும், இந்தக் காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் மட்டுமே உண்டு. இதில் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வெர்ஷன் இல்லை. இதன் வடிவமைப்பு எஸ்யுவிக்கான கம்பீரத்துடன் வசீகரமாக உள்ளது.
மேலும் இந்த சிட்ரோன் காரின் வடிவமைப்பு இந்தியாவுக்கு சற்று புதியதுதான். இதன் முன்பக்க கிரில் மற்றும் ஹெட்லைட் அனைத்துமே இந்தியச் சந்தைக்குப் புதியவை.
இதன் நீளம் 4.5 மீட்டர். வீல் பேஸ் 2.7 மீட்டர். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 230 மிமீட்டர். இடவசதி, பெர்பா மென்ஸ் அனைத்துமே கிளாஸ்.
இந்த எஸ்யுவி பிரீமியம் ரக எஸ்யுவி என்பதால் இந்தக் காருக்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. இதன் விலை ரூ. 30 லட்சம் என்ற வரம்பில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment