30 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றிய கேப்டனுக்கு சிறைவாசம் என்ன நடந்தது

30 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றிய கேப்டனுக்கு சிறைவாசம்


அஸ்ஸாமில் முகமது சுனாவுல்லா என்ற ராணுவ உயரதிகாரியை வெளிநாட்டவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அவர் வெளிநாட்டவர் சிறைவைக்கும் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

30 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி  கேப்டனாக பதவி உயர்வு பெற்றவர் சுனாவுல்லா. அவரது சேவையை பாராட்டி குடியரசுத் தலைவர் தங்கப்பதக்கம் வழங்கியுள்ளார்.

எப்போதோ யாரோ ஒருவர் அவர் டாக்காவை சேர்ந்தவர் என்று வழக்குத் தொடர அந்த வழக்கில் பல ஆண்டுகளுக்குப் பின் வெளியான தீர்ப்பில் சுனாவுல்லாவை வெளிநாட்டவர் என்று நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

  இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ராணுவ உயரதிகாரியின் குடும்பத்தினர் தவறான தகவல் அளிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்புக்காக உழைத்தவருக்கு அநியாயமாக தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு