உறுதி யான பாஜகவின் வெற்றி வெளியான கருத்துகணிப்புகள்
பாஜக ஆட்சி உறுதி
இன்று மாலையுடன் நிறைவடைந்தது தேர்தல்.7 கட்டங்களாக நாடு முழுவதும் இந்த தேர்தல் நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப் படுகிறது.
இந்நிலையில் பல கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது.2014 பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளை சரியாக கணித்த சி வோட்டர் ஆங்கிலத்தில் புகழ் பெற்ற Republic TV யுடன் இணைந்து நடந்த கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
இந்த கருத்து கணிப்பில் பாஜக விற்கு 287 இடங்களும் காங்கிரஸிற்கு 128 இடங்களையும் Sp+Bsp கட்சிகளுக்கு 40 இடங்களும் மற்றும் இதர கட்சிகள் 87 இடங்களும் பெறும் என இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என சொல்லிக்கொண்டு இருந்தது தற்பொழுது உறுதியாகியுள்ளது.இதனால் பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இந்த கருத்து கணிப்பு மட்டுமன்றி அனைத்து கருத்து கணிப்புகளும் பாஜகவே பெரும்பான்மை பெரும் என்பதை கூறியுள்ளது.
இன்று தமிழகத்தில் 4 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது ஏனெனில் தற்பொழுது உள்ள அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 4 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
Comments
Post a Comment