சிந்தித்து செயல் படவேண்டும்
உயிர் தப்பிய கழுதை
ஓர் அடர்ந்த காட்டில் ஓர் ஓநாய் வசித்து
வந்தது. அதற்கு மிகவும் பசியாக இருந்தது. பல நாள்களாக உண்ணுவதற்கு எதுவுமே கிடைக்கவில்லை . அதன் வயிறு காலியாக இருந்தது; அதன் கால்கள் மிகவும் வலிமை
யற்றுத் துவண்டு இருந்தன.'உண்ணாமலே
நான் இருந்தேனேயானால் விரைவில் இறந்து விடுவேன்,'' என்று புலம்பியது.
காட்டின் எல்லையில் நின்று கொண்டிருந்த ஒரு கழுதை திடீரென்று ஓநாயின் கண்களுக்குத் தெரிந்தது. அது மிகவும் குதூகலமடைந்தது."நான் இனிமேல் பசியோடு இருக்க வேண்டாம்.
நான் அந்தக் கழுதையைச் சாப்பிட்டுப் பசிதீர்த்துக் கொள்வேன்," என்று கூறிக் கொண்டது.சத்தம் செய்யாமல் மிக மெதுவாக அதனருகில்சென்றது. ஓநாய் அருகில் வருவதைக் கழுதை
கவனித்தது.
ஓநாயிடமிருந்து கழுதையால்
தப்பித்துச் செல்லமுடியாது. ஏனெனில், அது
மிக நெருங்கி வந்து விட்டது. கழுதைக்கு
மிகவும் பயம் பிடித்துக் கொண்டது. ஆனாலும் அது தப்பித்துச் செல்வதற்கான வழியை அமைதியாக யோசித்தது. காலத்திற்கு
ஏற்றவாறு சிந்தித்ததால் அதற்கு ஒரு
யோசனை தோன்றியது. காலில் அடிபட்டது போல் கழுதை நொண்ட ஆரம்பித்தது.
மிகவும் மெதுவாகக் கழுதை நடப்பதைக்
கண்டது ஓநாய். கழுதை அங்கிருந்து ஓடி விட முடியாது என்ற நம்பிக்கை அதற்கு ஏற்பட்டது.கழுதையிடம் சென்ற ஓநாய், "என்னவாயிற்று?ஏன் நொண்டுகிறாய்?" என்று கேட்டது.வலியால் துன்பப்படுவது போல் பாசாங்குசெய்த கழுதை, "என் காலில் ஒரு முள்இருக்கிறது என கழுதை கூறியது.
நான் எடுக்கிறேன் என ஓநாய் கூற கழுதை முள் உள்ள பின் காலை காட்டியது.அதனை எடுக்க ஓநாய் தனது தலையை அருகில் கொண்டு சென்றது.
அதற்கு பிறகு கழுதை எட்டி உதைத்து ஓநாய் அடிவாங்கி கீழே விழுந்தது.விழுந்த பின்னே சிந்தித்து நாம் இவ்வளவு பெரிய முட்டாளா என்று..
இதே போல நாம் ஏமாற கூடாது வாழ்கையில் சிந்தித்து செயல் படவேண்டும்.
Comments
Post a Comment