மசூத் அசரை சர்வேதேச தீவிரவாதியாக அறிவித்தனர்.
பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராகப் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர்.
இதற்கு ஜெயிஷ் இ முகமது அமைப்புதான் காரணம் எனப் பின்னர் நடந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். அவர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதால் மசூத் அசாரின் சொத்துகள் உலகில் எங்கு இருந்தாலும் முடக்கப்படும், அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்ல முடியாது. ஜெயிஷ் இ முகமது அமைப்புக்கு எந்த நாடும் உதவி செய்ய முடியாது
Comments
Post a Comment