பொய்களைக் கூறி பிரசாரம் செய்கிறது காங்கிரஸ்" - மோடி குற்றச்சாட்டு!
மத்தியப்பிரதேச மாநிலத்தின் கண்ட்வா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர், சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை நடந்ததற்கு என்ன செய்ய முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாம் பித்ரோடா கூறியிருப்பது, காங்கிரஸ் கட்சியின் மனோபாவத்தை காட்டுவதாகக் கூறினார்.
இந்தியாவில் எப்போதெல்லாம் பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்களோ, அப்போதெல்லாம், அப்பாவி மக்களை காங்கிரஸ் கட்சியினர் சிறையில் தள்ளுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
நமது மத பாரம்பரியத்துக்கும், கலாச்சாரத்துக்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில், இந்து தீவிரவாதம் என்ற சதியை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மக்களுக்காக சிறந்த செயல்களை செய்துவிட்டு, தான் பிரசாரம் செய்து வருவதாகவும், காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பொய்களைக் கூறி பிரசாரம் செய்து வருவதாகவும் நரேந்திர மோடி கூறினார்.

Comments
Post a Comment