இறுதி பந்து no ball புதிய சர்ச்சை
நடந்து முடிந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை அணி வென்றது. இதற்குப் பிறகு தோனியின் ரன் அவுட் ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது அவுட் நாட் அவுட் இன்று என்று விவாதங்களில் நிறைய கிரிக்கெட் வல்லுனர்கள் இந்த முடிவை பேட்ஸ்மேனுக்கு சாதாரணமாகவே கொடுத்திருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
இதனை கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் ஏற்றுக்கொண்டுள்ளார் தோனிக்கு இப்படி நடந்ததற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
”நான் தோணியாக இருந்திருந்தால் அந்த இடத்தில் கோபப்பட்டு என் விக்கெட்டை திரும்பப் பெற்று இருப்பேன்”, என சச்சின் கூறியுள்ளார்.
இந்த ரன் அவுட் சர்ச்சையை தொடர்ந்து ஐபிஎல் இறுதிப் போட்டியில் இறுதி பந்து noball என புது சர்ச்சை எழுந்துள்ளது.
அந்தப் போட்டியின் இறுதிப் பந்தில் ஜடேஜா noball க்கு அப்பீல் செய்தார் அதனை அம்பயர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.
இந்த ஐபிஎல் போட்டி முழுவதும் இதுபோல பல சர்ச்சைகள் எழுந்தாலும் இந்த போட்டி இறுதிப் போட்டி என்பதால் இந்த சர்ச்சை வெடித்துள்ளது. இந்நாள்வரை அந்த இறுதி பந்து no ball ஆ இல்லையா என்பதை யாரும் பார்க்கவில்லை.
இன்று தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்நிலையில் இப்படிப்பட்ட தவறுகள் நடந்தால் கிரிக்கெட்டின் ரசிகர்கள் குறைய வாய்ப்பு உள்ளது ஆதலால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு நேர்மையான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
Comments
Post a Comment