தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது
தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது
கோடை வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வறட்சி நிலவி வருகிறது.
தண்ணீர் இல்லாம் பயிர்கள் வாடி வருகின்றன என விவசாயிகள் வருந்தி வருகின்றனர்.இந்த நீர் வரவில்லை என்றால் இந்த போகம் நஸ்டம்தான்.
ஆனால் கர்நாடகாவில் தற்போது மழை பெய்து வருவதால் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என மக்கள் எண்ணிய நிலையில் தமிழகத்திற்கு தற்போதைய சூழலில் தண்ணீர் தர இயலாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் வறட்சிகால நீர்ப்பங்கீடு முறையின் அடிப்படையிலேயே தண்ணீர் தர முடியும் என்று ஏற்கனவே காவிரி ஆணையத்திடம் தெரிவித்துவிட்டதாக கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
Comments
Post a Comment