இன்று மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்
மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்னர், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் 5வது கூட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் மழை நீர் சேகரிப்பு, வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் நிலை, வேளாண் சீரமைப்புகள், விவசாயிகளின் வருவாயை பெருக்குதல், நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.இந்த கூட்டத்திற்கு தமிழக முதல்வர் அவர்களும் செல்கிறார்.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு பல நல திட்டங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.பாஜக தமிழகத்தில் இடம் பதிக்க பல நல திட்டங்களை செய்ய வாய்ப்புள்ளது.
Comments
Post a Comment