இந்தியா வல்லரசாக பாஜக அரசு வழிவகுக்கும்
பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற இலக்கு
குடியரசு தலைவர் மாளிகையில், நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின், ஐந்தாவது கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட, அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் பங்கேற்றுள்ளனர்.
நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2024ஆம் ஆண்டில் 5 லட்சம்கோடி டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்த இலக்கை அடைவது மிகவும் சவாலானது என்றாலும், அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பு இருந்தால், எளிதில் அடைய முடியும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா வல்லரசாக பாஜக அரசு வழிவகுக்கும்.
Comments
Post a Comment