மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை
மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை
.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை என்று கூறினார்.
எந்த மொழியையும், யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்ற அவர், அனைத்து மொழிகளையும் வளர்ச்சி அடைய செய்யவே அரசு விரும்புகிறது என்று கூறினார்.
மேலும் கல்வி கொள்கை குறித்த பரிந்துரையை குழு அரசுக்கு அளித்துள்ளதை சுட்டிக்காட்டிய ஜவடேகர், பரிந்துரை குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார். மக்களின் கருத்தை அறிந்த பின்னரே மத்திய அரசு முடிவு எடுக்கும் என்றும் ஜவடேகர் தெரிவித்தார்.
Comments
Post a Comment