சபரிமலை மீண்டும் ஒரு புதிய முடிவு. கேரள அரசு செய்த காரியம்
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றம்
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இதனை எதிர்த்து 2 பெண்கள் உள்ளே சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில் இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கேரள அரசு.
உயர் நீதி மன்றம் ஆணையை எதிர்த்து சண்ட்டமன்றதில் சட்டம் என்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது.மீண்டும் பழைய நிலைக்கே செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொல்லம் எம்.பி பிரேமச்சந்திரன் மக்களவையில் தனிநபர் மசோதா ஒன்றை கொண்டு வர இருக்கிறார். அதில், சபரிமலையில் 10 வயது முதல் 60 வயதான பெண்களுக்கு வழிபாடு நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு முன் என்ன நிலை இருந்தது, அதே நிலை தற்போது தொடர வழி செய்ய வேண்டும் என்று மசோதாவில் கோரியுள்ளார்.
மேலும் இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்த மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், ”பாரம்பரியம் மற்றும் கலாசாரம் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது நல்லதே. மத்திய அரசு உடனடியாக சபரிமலை விவகாரத்தில் சட்டம் இயற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7fஎதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
Comments
Post a Comment