வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான புகார் தேர்தல் அணையம் அதிரடி
மிண்ணனு வாக்குபதிவு எந்திரங்கள் மீதான குற்றச்சாட்டு - தேர்தல் ஆணையம் மறுப்பு*
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக 303 தொகுதிகளைக் கைப்பற்றி, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில், மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து, இந்த வெற்றி பெறப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்கு பதிவு சதவீதம் குறித்த துல்லியமான தகவல்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனுப்பும், தகவல்கள்களிலிருந்து பெறப்படுவதாகக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அவ்வாறு துல்லியமான வாக்கு சதவீதத்தை கண்டறிவதற்கு, 2 அல்லது 3 மாதங்கள் ஆகியதாக கூறியுள்ளது.
மேலும் தற்போது நவீன தொழில்நுட்பங்களை வைத்து, துல்லிய வாக்கு சதவீதத்தை விரைந்து கணக்கிட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், அவ்வாறு அந்த கணக்கீடு பெற்ற பின்னர், அந்த தகவல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment