கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சென்னையில்
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது*
சென்னை அருகேயுள்ள சிட்லபாக்கம், மாடம்பாக்கம் பேரூராட்சிகளில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டப் பணிகளை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும், அமைச்சர் பெஞ்சமினும் துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, தமிழகத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின்போது நிலவிய குடிநீர் தட்டுப்பாடு, தற்போது தவிர்க்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் முழு அளவில் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட வேலுமணி, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
Comments
Post a Comment