வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ஒரு ஓட்டுக்கு இவ்வளவா
வேலூர் தொகுதிக்கு விரைவில் மக்களவைத் தேர்தல்
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தவிர இதர 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதனையும் படிக்க .................ராஜராஜ சோழன் பற்றி தவறாக பேசியதற்காக கைது
வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை அடுத்து, வருமான வரித்துறையினர் துரைமுருகன் மற்றும் அவரது உதவியாளருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் 11 கோடி அளவில் பணம் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து, விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்த தொகுதியில் மீண்டும் பணப்பட்டுவாடா நடக்கும்.இதனை தடுப்பது கடினம்.
இனி தேர்தல் வந்தால் ஓட்டுக்கு எவ்வளவு என கணக்கிட முடியாது அளவு பணம் புழங்கும் என தெரிகிறது.
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7fஎதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
Comments
Post a Comment