செல்லூர்சென்னையில் ராஜூ வின் திட்டத்தை பயன்படுத்த வேண்டிய நேரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 61 மி.கன அடி தண்ணீர் ஆவியாகும் அபாயம்
தமிழகத்தில் பருவ மழை முற்றிலும் பொய்த்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளிலும் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த ஏரிகள் அனைத்தும் பருவமழை பொய்த்ததால் முற்றிலும் வறண்டு பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.
நேற்று காலை 9 மணி நிலவரப்படி, பூண்டி ஏரியில் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், 56 மி. கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.
இதேபோல், செம்பரம்பாக்கம் ஏரியில் முழு கொள்ளளவான 3,645 மி.கன அடியில், ஒரு மி.கன அடியும், புழல் ஏரியில் முழு கொள்ளளவான 3,300 மி.கன அடியில் 3 மி.கன அடியும், சோழவரம் ஏரியில் முழு கொள்ளளவான 1,081 மி.கன அடியில் ஒரு மி.கன அடியும் நீர் இருப்பு உள்ளது.
மொத்தம் கொள்ளளவு 11,257 மி.கன அடி உள்ளதில் 61 மி.கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த நீரும் கடும் வெயிலினால் ஆவியாகி குறைந்து வருகிறது. இந்நிலையில், "சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளானது வறண்டு வருகிறது.
பருவமழை பெய்து ஏரிகளுக்கு நீர்வரத்து வந்தால்தான் சென்னை மாநகர மக்களின் தாகத்தை முழுமையாக தீர்க்க முடியும்" என்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனை தடுக்க நாம் செல்லூர் ராஜூ வின் தேர்மாகோல் திட்டத்தை சரியாக பயன் படுத்தவேண்டும்.பயன்படுத்தினால் நீர் ஆவியாவதை தடுக்கலாம்.
Comments
Post a Comment