நக்கீரன் கோபாலுக்கு இடைக்கால தடை விதித்த கோர்ட்
நக்கீரன் கோபாலுக்கு எதிரான விசாரணைக்கு இடைக்காலத் தடை*
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் கோபால் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக, ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதன் விசாரணைக்காக, வரும்
தேதி நேரில் ஆஜராகுமாறு நக்கீரன் கோபால் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை, மத்திய - மாநில அரசுகளின் அனுமதியின்றி கீழமை நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என நக்கீரன் கோபால் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.
Comments
Post a Comment