அமமுக ஒரு கட்சியே இல்லை பரபரப்பு பேட்டி
அமமுக கட்சியே அல்ல -அமைச்சர் ஜெயக்குமார்*
காயிதே மில்லத்தின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் ரமலான் மற்றும் காயிதே மில்லத் பிறந்தநாள் ஒரே நாளில் வந்துள்ளதால், இன்றைய நாள் மிகவும் சிறப்புக்குரிய நாளாக பார்ப்பதாக தெரிவித்தார்.
டி டி வி தினகரன் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன வென கேட்டால் கட்சிக்குள் ஸ்லீப்பர் செல் கள் உள்ளனர் இதனை பற்றியும் அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.
மேலும் டி.டி.வி தினகரன் ஸ்லீப்பர் செல் என்று பேசிக்கொண்டே உள்ளார், ஆனால் நிறைய தொண்டர்கள் மீண்டும் அதிமுக கட்சியில் இணைந்து வருகின்றனர்.
அமமுக ஒரு கட்சியே கிடையாது. அது ஒரு குழு. டி.டி.வி தினகரன் கட்சியை வழிநடத்தவும் முடியாது என்று கூறினார்.
Comments
Post a Comment