தமிழகத்தில் ஜெர்மனி உதவியுடன் மின்சார பேருந்துகள்
ஜெர்மனி உதவியுடன் 12 ஆயிரம் பேருந்துகள் வாங்க தமிழக அரசு திட்டம்
ஜெர்மனி உதவியுடன் 12 ஆயிரம் பேருந்துகள், 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மின்சார வாகனங்கள் தைரியமாக வாங்கலாம்
மேலும் சென்னை, கோவை, மதுரை போன்ற இடங்களில் முதல் கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும் முக்கிய வழித்தடங்களில் சார்ஜிங் பாயின்ட் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மின்சார பேருந்துகள் வந்தால் டீசலின் தேவை குறையும் நம் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாமல் இருக்கும்.இதனால் பலரும் மின்சார வாகனங்களுக்கு மாற வாய்ப்புள்ளது.
Comments
Post a Comment