காந்தி குறித்து சர்ச்சை பேச்சு திருமாவளவன் மீது வழக்கு
காந்தி - கோட்சே குறித்த சர்ச்சை பேச்சு - திருமா மீது வழக்குப்பதிவு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன், கடந்த மே மாதம் 18ம் தேதி சென்னை, அசோக் நகரிலுள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
வல்லரசு ஆக போகும் இந்தியா பாஜக அரசு
வல்லரசு ஆக போகும் இந்தியா பாஜக அரசு
அப்போது, காந்தி ஓர் இந்து தீவிரவாதி எனவும், கோட்சே ஓர் இந்து பயங்கரவாதி எனவும் குறிப்பிட்டு பேசியிருந்தார் திருமாவளவன். இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தன.
இந்நிலையில், திருமாவளவன் மீது இரு பிரிவினரிடையே அமைதியை குலைப்பது, உள்நோக்கத்தோடு தகவல்களை பரப்புதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7fஎதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com
Comments
Post a Comment