மத்திய அரசு தமிழை ஆதரிக்கும் - நிர்மலா சீதாராமன்
தொன்மையான தமிழை போற்றி வளர்க்க மத்திய அரசு முன்னின்றுஆதரிக்கும் - நிர்மலா சீதாராமன்*
மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள புதிய கல்வி குழுவின் வரைவில், மும்மொழி கொள்கை பிரிவில், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி மொழி கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளதற்கு, கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் "மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அரிக்கை அமல்படுத்தப்படும்.
பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே ஒரே பாரதம் உன்னத பாரதம் முயற்சியை துவக்கினார்.
தொன்மையான தமிழை போற்றி வளர்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்

Comments
Post a Comment