முகிலன் குறித்து துப்பு கிடைத்துள்ளது சிபிசிஐடி
முகிலன் குறித்து துப்பு கிடைத்துள்ளது - உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்
முகிலன் என்பவர் நம்முள் சிலருக்கு மட்டுமே தெரிய வாய்ப்பு உள்ளது.#pray_for_nesamani ட்விட்டர் டிரெண்ட் ஆன பொழுது முகிலன் பேசப்பட்டார்.
புல்வாமா தாக்குதல் மேலும் ஒரு செய்தி
அவர் ஒரு போராட்டத்திற்கு சென்று காணாமல் போனதாக பரவலாக பேசப்பட்டது.இதனால் அவர் காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரித்தது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமாகி 112 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அவரை கண்டுபிடிக்கக் கோரி ஹென்றி டிபேன் என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் சிபிசிஐடி காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், முகிலன் மாயமானது குறித்து துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் பதில் தாக்கல் செய்துள்ளனர்.
எனினும், அது பற்றிய தகவல்களை பொதுவெளியில் பகிர்ந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் சிபிசிஐடி கூறியுள்ளது.
Comments
Post a Comment