சிலை கடத்தல் விசாரணை அமர்வு களைப்பு
தமிழக கோவில் சிலைகள், கோவில் நகைகள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் அமைக்கப்பட்டது.
தற்போது வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை நியமித்ததற்கான அறிவிப்பாணையை உயர் நீதிமன்ற பதிவுத்துறை மாற்றியமைத்துள்ளது.
அதன்படி சிலைக்கடத்தல் தொடர்பான பொது நல வழக்குகளை, பொது நல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலை கடத்தல் வழக்கில் கைதாகும் நபர்களின் ஜாமீன் மனுக்களை, பிற வழக்குகளின் ஜாமீன் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளே விசாரிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment