மரங்களைக் காக்க ஆம்புலன்ஸ் சேவை
மரங்களைக் காக்க ஆம்புலன்ஸ் சேவை
மனிதனுக்கு அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் பயன்படுத்துவது போல் மரத்திற்கும் ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது.
மரங்களை வளர்க்கவும், இயற்கையை பாதுகாக்கவும் பல்வேறு தன்னார்வலர்கள் முன்வருகின்றனர். அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள சாசா என்ற தனியார் நிறுவனம் மரங்களை காப்பதற்காக ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கியுள்ளது.
இந்த வாகன சேவையை சமீபத்தில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு துவங்கிவைத்தார். மேலும் மரத்திற்கான ஆம்புலன்ஸ் சேவையை தொடர்ந்து, மரங்களை வேரோடு இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி வேறு இடத்தில் நட்டுவைக்கும் ஹைட்ராலிக் இயந்திரத்தையும் வாங்க இந்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்பொழுது மழை பொழியாமல் குடிப்பதற்கு நீர் இல்லாமல் இருக்கும் நிலையில் இது ஒரு நல்ல திட்டம்.நமக்கு நிழல் தேவை படும் இடத்தில் தேவை இல்லாத மரத்தை நட்டு வைக்கலாம்.
இது ஒரு நல்ல திட்டமே.............

Comments
Post a Comment