அமைச்சரவை கூட்டம் என்ன முடிவுகள் எடுக்கப்படும்
ஜூன் 12ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்*
மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் முழு அமைச்சரவைக் கூட்டம் வரும் 12ம் தேதி நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
புல்வாமா மேலும் ஒரு செய்தி
இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமராக 2ம் முறையாக மோடி பொறுப்பேற்ற பின்னர் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து பிரதமர் விரிவாக பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த கூட்டத்தில், கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் மத்திய அமைச்சரவை குழு முதன் முறையாக கூடுகிறது.நாட்டின் நலத்திட்டங்கள் குறித்தும் GST குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்க படுகிறது.
#Cabinet #BJP # India #Tamil
Comments
Post a Comment