எடப்பாடி மோடியை சந்திக்கிறார் தமிழ்,நதி நீர்,காவேரி, தண்ணீர் பஞ்சம்
பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதன்முறையாக நிதி ஆயோக்கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
நிதி ஆயோக் கூட்டம்
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று டெல்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலரும் சென்றுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார்.
அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார். பிரதமர் மோடியுடன் நடைபெற்ற சந்திப்புக்கு பின் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோரையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்கள் வர வைப்புள்ளதாக தெரிகிறது.பல மத்திய அமைச்சர்களையும் சந்தித்தார்.
Comments
Post a Comment