புதுச்சேரி சபாநாயகர் போட்டியின்றி தேர்வு
புதுச்சேரி சபாநாயகர் போட்டியின்றி தேர்வு
புதுவை சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டதால் பதவியை ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றியும் பெற்றார்.
இந்நிலையில், புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ளது. எனவே புதிய சபாநாயகர் தேர்வு செய்ய இன்று நண்பகல் 12 மணி வரை சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் காங்கிரஸ் வேட்பாளர் சிவகொழுந்து போட்டியின்றி சபாநாயகராக தேர்வாகியுள்ளார்.

Comments
Post a Comment