ஹைட்ரோ கார்பன் போராடிய நபர்கள் இருமொழி கொள்கை
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய நபர்கள் மீது வழக்குப்பதிவு
திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான பணிகள் சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. இதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மேலும் திருத்துறைப்பூண்டி, கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடந்தது. இந்நிலையில் கடந்த நாட்களில் திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் பேர் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இருமொழிக் கொள்கைதான் தமிழக அரசின் முடிவு - துணை முதல்வர்*
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் பின்பற்றப்படும் மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்போவது இல்லை என்றும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி பரிந்துரையை தமிழக அரசு ஏற்காது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment