ஓ.பி.ரவீந்திரநாத் ஒதுக்கப்பட்ட கதை

- ஓ.பி.ரவீந்திரநாத் ஒதுக்கப்பட்ட கதை


        மோடியின் அமைச்சரவையில், அ.தி.மு.க இடம்பெறாதது அக்கட்சியினரை அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.*

                `அ.தி.மு.க-வை ஏன் ஒதுக்கியது பி.ஜே.பி?' என்று விவரமறிந்த பி.ஜே.பி தலைவர்கள் சிலரிடம் கேட்டோம். ``முதலில் இவர்களுக்கு பதவி கொடுப்பதாக அமித்ஷா, மோடி இருவருக்குமே எண்ணமில்லை. தமிழகத்தில் பி.ஜே.பி படுதோல்வியைச் சந்தித்ததற்கு அ.தி.மு.க தான் காரணம் என்று கருதுகிறார்கள். சட்டமன்ற இடைத்தேர்தலில் காட்டிய கவனத்தை, நாடாளுமன்றத் தேர்தலிலும் காட்டியிருந்தால், ஓரிரு தொகுதிகளிலாவது பி.ஜே.பி வென்றிருக்க முடியும் என்பது கட்சித் தலைமையின் கணிப்பு.*

         இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றிபெற்றார். ரிசல்ட் வருவதற்கு முன்னதாகவே, மகனை மத்திய அமைச்சராக்கி அழகு பார்க்க காசிக்கே சென்றார் ஓ.பி.எஸ். கண்ணில் பட்ட பி.ஜே.பி தலைவர்கள் காலில் எல்லாம் மகனை விழவைத்து ஆசிர்வாதம் வாங்கினார். கூட்டணியிலுள்ள சிவசேனா, அகாலி தளம், அப்னா தல் ஆகிய கட்சிகளையெல்லாம் அழைத்து மத்திய அமைச்சரவைகுறித்து விவாதித்த பி.ஜே.பி தலைமை, அ.தி.மு.க-வை மட்டும் அழைக்கவில்லை. அப்போதே, அ.தி.மு.க-வுக்கு வாய்ப்பு இருக்காது என்பது புரிந்துவிட்டது.*

      தொடர்ச்சியாக ஓ.பி.எஸ் முயற்சிப்பதைப் பார்த்து, தனது ஆதரவாளரும் மாநிலங்களவை எம்.பி-யுமான வைத்திலிங்கத்தை மத்திய அமைச்சராக்க எடப்பாடி முயற்சிக்கத் தொடங்கினார். ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் இருவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே எடப்பாடி கையில் எடுத்து அரசியல் செய்வார் என ஓ.பி.எஸ் எதிர்பார்க்கவில்லை. ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், வைத்திலிங்கத்துக்கும் கொடுக்க வேண்டுமென எடப்பாடி காய் நகர்த்த, பி.ஜே.பி தலைமை இருவருக்கும் ‘நோ’ சொல்லிவிட்டது. மொத்தத்தில் எடப்பாடிதான் இதில் ‘ஹேப்பி’!” என்று சிரித்தனர்.*

     கடந்த மே 29-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வைத்திலிங்கத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாமா... என பி.ஜே.பி-யில் பேச்சு ஓடியுள்ளது. ‘அவங்க பஞ்சாயத்த முதல்ல முடிச்சுட்டு நம்மகிட்ட வரட்டும். அதை அப்படியே ஓரமா வையுங்க’ என அமித் ஷா சொல்லிவிட்டாராம். கட்சி உள்ளடி வேலையினால் ஓ.பி.ஆர் உருண்டு எழுந்ததற்காகவாவது ஒரு அமைச்சர் பொறுப்பு கொடுத்திருக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் ‘உச்’ கொட்டும் அளவுக்கு நிலைமை போய்விட்டதுதான் பரிதாபம்.*

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு