புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு பதில்
புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு பதில்
கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து 🚗கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.
காவேரி வேளாண்மை கூடியது டெல்லியில்
இதனையடுத்து, உளவுத்துறை முன்கூட்டியே தகவல் அளித்தும் பாதுகாப்பு படை வீரர்களை வான்வழியாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இந்நிலையில் புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல என மத்திய அரசு பதில் அளித்துள்ளது. மேலும், "அனைத்து பாதுகாப்பு முகமைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுகின்றன. உளவுத்துறையின் உள்ளீடுகள் பல்வேறு நிறுவனங்களிடையே நிகழ்நேர அடிப்படையில் பகிரப்படுகின்றன.
ஜம்மு-காஷ்மீர் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய நிதியுதவியால் பயங்கரவாதம் ஆதரிக்கப்படுகிறது. இருப்பினும், பயங்கரவாதத்தின் மீதான சகிப்புத்தன்மையற்ற கொள்கை மற்றும் பாதுகாப்பு படையினரால் தொடர்ச்சியான நடவடிக்கை ஆகியவற்றின் காரணமாக ஏராளமான பயங்கரவாதிகள் கடந்த சில ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f
எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
Comments
Post a Comment