மல்லையா 9000 கோடியை திருப்பி தருகிறாரா
இந்தியாவுக்கு எதிராக விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு இன்று விசாரணை
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெலலிதாவுக்கு நடந்தது என்ன ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்
இதனையடுத்து, இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு⚖ எதிராக லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது
நாள் முழுவதும் நடைபெறும் இந்த விசாரணையின்போது, இந்திய அரசு மற்றும் மல்லையா தரப்பு வக்கீல்கள் கூடுதல் வாதங்களை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசாரணையைத் தொடர்ந்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மல்லையாவின் மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில், அந்த தீர்ப்பு வெளியான 28 நாள்களுக்குள் அவர் நாடு கடத்தப்பட வேண்டும். அதேசமயம், அவரது மனு ஏற்கப்பட்டால், உயர்நீதிமன்றத்தில் விரிவாக விசாரணை நடைபெறும்.
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f
எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
Comments
Post a Comment