ஜெலலிதாவுக்கு நடந்தது என்ன ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்
ஜெயலிதா அவர்களுக்கு என நடந்தது என விசாரிக்க சென்ற குழுவிற்கு என்ன நடந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு பதில்
விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு நேற்று அப்போலோ டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இதற்கு எதிராக அப்போலா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அப்போலோ நிர்வாகம்
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை சுட்டிக்காட்டி ஆணைய விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அப்போலோ நிர்வாகம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. அப்போலோ நிர்வாகத்தின் இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் ஜூன் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, மேலும் 4 மாதம், கால அவகாசத்தை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f
எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
Comments
Post a Comment