3000 கோடியல்ல.. 30,000 கோடியில் கூட இவருக்கு சிலை வைக்கலாம்

3000 கோடியல்ல.. 30,000 கோடியில் கூட இவருக்கு சிலை வைக்கலாம்.

இந்தியா ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரத்தை நள்ளிரவில் பிச்சையாக பெற்ற உடன்..

இஸ்லாமிய சுல்தான்களும் நவாப்களும் ஆண்ட பல்வேறு பகுதிகள் இந்தியாவுடன் இணைய மறுத்தன. அவர்கள் இந்தியாவுடன் இணைய வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்ற ஒரு ஒப்பந்தத்தை ஆங்கிலேய நரிகள் ஏற்படுத்தி இருந்தார்கள்.

ஹைதராபாத்தை ஆண்ட நவாப் உஸ்மான் அலி கான் தான் இந்தியாவோடு இணைய போவதில்லை என்று கூறிவிட்டான். தில்லியில் சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலை சந்தித்த நிஜாமின் திவான் தாங்கள் பாகிஸ்தானோடு இணைவோம் அல்லது சுதந்திரமாக இருப்போம் என்றான்.

ஆச்சரியப்பட்ட படேல் ஹைதராபாத்தில் 85 சதவீதத்தினர் இந்துக்கள். எப்படி நீங்கள் பாகிஸ்தானோடு இணைவீர்கள்? என்று கேட்டார். நிஜாமுக்கு அது ஒரு பிரச்சனை இல்லை அந்த 85 சதவீத இந்துக்களை அழிக்க காசிம் ரஜ்வியின் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமிய அடிப்படைவாத ரஜாக்கர் படை தயாராக இருக்கிறது என்றான்.

நிஜாமின் பயங்கர படுகொலை திட்டத்தை கேட்ட படேல் அதிர்ந்து போனார். ஒரு கணமும் தாமதிக்கவில்லை இரும்பு மனிதர். உடனடியாக 35,000 இந்திய ராணுவத்தினரை அனுப்பி ஹைத்தராபாத்தை இணைக்குமாறு ஆணையிட்டார். போரில் பலத்த சேதமுற்ற நவாபின் படை சரணடைந்தது. இந்துக்கள் மீது ரஜாக்கர் படை வன்முறையை கட்டவிழ்த்து விட, அதை ஒடுக்கியது படேலின் படை. (நவாபின் வீரர்கள் அச்சத்தில் நடுநடுங்கி பலர் தாடியை மழித்துக் கொண்டு இந்துவாய் காட்டிக் கொண்டதாக சொல்வார்கள்) கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் இஸ்லாமிய அடிமைத்தனத்தில் இருந்த இந்துக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். மதக் கலவரத்தில் 40,000 பேர் இறந்ததாக குறிப்பிடுகிறார்கள். சிலர் இரண்டு லட்சம் என்கிறார்கள்.

இரும்பு மனிதர் மட்டும் அன்று உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால், இன்று தென்னிந்தியா தெற்கு பாகிஸ்தானாக மாறி இருக்கும். இரும்பு மனிதருக்கு ஒவ்வொரு இந்துவும் காலமெல்லாம் நன்றி சொல்ல கடன்பட்டிருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்