மடிக்கணினி வழங்க சென்ற எம்.எல். ஏ நேர்ந்த நிலைமை
சட்டமன்ற உறுப்பினரை வெள்ளைத்தாளில் உறுதிமொழி வழங்க வைத்த மாணவர்கள்* தமிழகம் முழுவதும் 2017-18ஆண்டில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் மானாமதுரையில் 2018-19, 2019-20 ஆகிய கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு நேற்று மடிக்கணினி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் இந்த விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால், அருகில் உள்ள அரசு பள்ளியில் அதிமுக எம்.எல்.ஏ நாகராஜன் கலந்து கொண்டு மடிக்கணினிகளை வழங்கிவிட்டு மானாமதுரை புறப்பட்டார். இதனையடுத்து, எம்.எல்.ஏ நாகராஜன் காரை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து, 2017-18 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல் அடுத்த கல்வியாண்டில் படித்த (2018-19, 2019-20) மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கமாட்டேன் என வெள்ளை பேப்பரில் எழுதி பச்சை மை பேனாவால் கையெழுத்திட்டு எம்.எல்.ஏ நாகராஜன் மாணவர்களிடம் வழங்கினார். இந்த செய்திகளை what's app இ...